past birth registration in sri lanka
By docsagency July 27, 2020 0 Comments

பிறப்பு சான்றிதழை பதிவு செய்வது பற்றி பலருக்கு குழப்பங்கள் உள்ளது. பிறப்புப்பதிவு தொடர்பான விபரங்கள் பற்றிய பதிவுகளின் தொடர்ச்சியாக இப்பதிவு (Past Birth Registration) அமைகின்றது .ஏற்கனவே பதியப்பட்ட பிறப்பு சான்றிதழ் ஒன்றின் மூலப்பிரதியை எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம் , பிறப்பு சான்றிதழை எவ்வாறு திருத்தலாம் என்பது பற்றி ஆராய்ந்துள்ளோம்.

அரச அலுவலகங்களில் பிறப்பு சான்றிதழ் தொடர்பான விடயங்களை கையாளுதல் சிக்கலான விடயமாக இருப்பதாகவே எல்லோரும் நினைக்கின்றார்கள்.ஆனால் இது தொடர்பான அடிப்படைகள் புரியும்போது இலகுவான விடயமாக இருக்கும் .

1.மனித வாழ்வின் முக்கிய நிகழ்வுகள்

பிறப்பு,விவாகம்,இறப்பு ஆகிய மூன்று நிகழுக்களும் பதிவு செய்யப்படவேண்டியது கடடயமானதாகும்.

2. பிறப்பு பதிவு ஏன் அவசியம்?

ஒரு குழந்தை பிறந்திருப்பதை தீர்க்கமாகவும் உத்தியோகபூர்வமாகவும் அறிவிப்பதே பிறப்பு பதிவாகும். அது ஒருவரின் பிறப்புக்கு வழங்கப்படும் உத்தியோகபூர்வ அங்கீகாரமாகும். பிறப்பு பதிவு மூலம் ஒரு குழந்தை பிறப்பு சான்றிதழ் ஒன்றை பெற்று கொள்வது சாத்தியமாகின்றது.

3. பிறப்பு தேவைப்படும் சந்தர்ப்பங்கள்

  • பாடசாலை அனுமதி
  • தேசிய அடையாள அட்டை பெறல்
  • பரீட்சை ஒன்றுக்கு தோற்றுதல்
  • வேலை வாய்ப்பை பெறல்
  • கடவு சீட்டு பெறல்
  • திருமண பதிவு மேற்கொள்ளல்
  • சாரதி அனுமதி பத்திரம் பெறல்
  • ஓய்வூதியம் போன்ற சமூக நலத்திட்ட நன்மைகளை பெறல்
  • வங்கி கணக்கொன்றை ஆரம்பித்தல்
  • காப்புறுதி செய்தல்,காப்புறுதி கோரிக்கைகளை சமர்ப்பித்தல்
  • ஊழியர் சேமலாப, ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றிலிருந்து பணம் பெறல்
Read:  இலங்கையில் திருமணம் செய்வதற்கான தகைமைகள் எவை?

4. பிறப்பு ஒன்றை பதிதல்

குழந்தை ஒன்று பிறந்து 3 மாதத்தில் பிறப்பு பதிவு செய்யப்படவேண்டும். இது பெற்றோரின் / பாதுகாவலரின் கடமையாகும்.

ஐக்கிய நாடுகளின் நீடித்த நிலைத்த அபிவிருத்திக்கான இலக்குகள் (2030) (Sustainable Development Goals (SDGs) அறிக்கையின் 16 வது இலக்கில் பிள்ளையின் பிறப்பு பதிவு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

TARGET 16.9 :By 2030, provide legal identity for all, including birth registration

5. வைத்தியசாலையில் நிகழ்ந்த பிறப்பு ஒன்றை பதிதல்

  • வைத்தியசாலை மருத்துவ உத்தியோகத்தர்கள் பிறப்பு பற்றி பிரதேச பிறப்பு இறப்பு பதிவாளருக்கு அறிக்கை ஒன்றை அனுப்புவார்கள் (B 48)
  • பிறப்பு மற்றும் இறப்பு மருத்துவ பதிவாளர்கள் உள்ள பெரிய வைத்தியசாலையில் குழந்தை பிறந்த வார்ட்டிலிருந்தே பிறப்பு பற்றிய தகவல்கள் பதிவாளருக்கு அனுப்பப்படும்.
  • வைத்தியசாலை அறிக்கை கிடைக்க பெற்றதும் பிறப்பு இறப்பு பதிவாளர் பிறப்பை மூன்று பிரதிகளில் பதிவு செய்து அவற்றில் ஒன்றை இலவசமாக விநியோகிப்பர்.

6. வீட்டில் நிகழ்ந்த பிறப்பு ஒன்றை பதிதல்

  • பெற்றோர்/ விபரம் அறிந்தவர்கள் பிறப்பு பற்றி கிராம அலுவலருக்கு அறிவிப்பர். அவர் அதனை பிரதேச பிறப்பு இறப்பு பதிவாளருக்கு அறிவிப்பார்
  • பெற்றோர்/ விபரம் அறிந்தவர்கள் பிறப்பு இறப்பு பதிவாளரை சந்தித்து தேவையான ஏனைய விபரங்களை வழங்குவர்.
  • பின்னர் பிறப்பு இறப்பு பதிவாளர் பிறப்பை மூன்று பிரதிகளில் பதிவு செய்து அவற்றில் ஒன்றை இலவசமாக விநியோகிப்பர்.
Read:  இலகுவாக திருமண சான்றிதழ் பெறுவது எப்படி?

7. பிறப்பு 3 பிரதிகளில் பதிவு செய்யப்படுகின்றது

  • மூலப்பிரதி – மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில்/ பிரதேச செயலகத்தில் பாதுகாக்கப்படும்.
  • இணைப்பிரதி – மத்திய பதிவேட்டறையில் பாதுகாக்கப்படும்.
  • இலவசப்பிரதி – தகவல் கொடுத்தவருக்கு இலவசமாக வழங்கப்படும்.

8. பதிவு செய்யப்படாத பிறப்பு ஒன்றை காலம் கடந்து பதிவு செய்துகொள்ளல்

  • ஏதேனுமொரு காரணத்தால் பிறப்பு நிகழ்ந்து 3 மாதத்தில் பதிவு செய்யப்படாவிடின் அதனை காலம் கடந்தும் பதிவு செய்ய முடியும்.
  • காலம் கடந்த பிறப்பொன்றை பதிவு செய்ய பிறப்பு இறப்பு பதிவுகள் கட்டளைச்சட்டம் பிரிவு 24 இன் கீழ் விண்ணப்பமொன்று பெற்றோரால் அல்லது பாதுகாவலரால் சமர்பிக்கப்படவேண்டும்.
  • விண்ணப்பபடிவத்தை மாவட்ட பதிவகத்தில்/ பிரதேச செயலகத்தில் பெறலாம்
  • படிவத்தில் தந்தை கையொப்பமிடவேண்டும். தந்தை இல்லாதவிடத்து தாயும், இருவரும் இல்லாதிருப்பின் பாதுகாவலரும் கையொப்பமிடலாம்.
  • பெற்றோர் முறைப்படி திருமணம் செய்யாதிருப்பின் இருவரும் கையொப்பமிடவேண்டும்.
  • கையொப்பம் சமாதான நீதவானால்/ மேலதிக மாவட்டப் பதிவாளரால் உறுதிப்படுத்த வேண்டும்.
  • ரூபா 50 கட்டணமாக செலுத்தப்படவேண்டும்.

9. பிறப்பு பதிவு விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பி வைக்க வேண்டிய ஆவணங்கள்

  • இப்பதிவு குறித்த மாவட்டத்தில் குறித்த பிரிவில் பதியப்படவில்லை என உறுதிப்படுத்தும் தேடுதல் விளைவு- ரூபா 200 செலுத்தி பெறலாம்
  • வைத்தியசாலை அறிக்கை
  • தடுப்பூசி கார்டு
  • குறிப்பு புத்தகம்
  • பாடசாலை அதிபர் அறிக்கை
  • கிராம சேவையாளர் அறிக்கை
  • பெற்றோரின் பிறப்பு சான்றிதழ்கள்
  • பெற்றோரின் விவாக சான்றிதழ்
  • நேர் மூத்த , நேர் இளைய பிள்ளையின் பிறப்பு சான்றிதழ்கள்
  • கிராம அலுவலரால் உறுதிப்படுத்தப்பட்ட பிள்ளை பட்டியல்
  • குடும்ப கார்ட்
Read:  பிறப்பு சான்றிதழில் திருத்தம் செய்வது எப்படி?

இவை அனைத்தும் அடங்கிய கோவை பிரதேச செயலகத்தில்/ மாவட்ட பதிவகத்தில் கையளிக்கப்பட வேண்டும்.

10. உத்தேச வயது சான்றிதழ் என்றால் என்ன?

பிறப்பு சான்றிதழ் உரிய காலத்தில் பதிவு செய்யபடாததும் காலம்கடந்த பிறப்பு பதிவின் கீழ் பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ள முடியாதவர்களின் பொருட்டும் அவர்களது விண்ணப்பத்தின் பேரில் பிறப்பு சான்றிதழுக்கு பதிலாக உத்தேச வயது சான்றிதழ் வழங்கப்படுகின்றது.

இதனை பெறுவதற்கு காலங்கடந்த பிறப்பு விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து உத்தேச வயது சான்றிதழை பெறுவதற்கென வழங்கப்படும் சத்திய கூற்றையும், பிறந்த திகதி, இடத்தையும் உறுதிப்படுத்தும் ஆவணங்களில் பெறக்கூடியவற்றை மாவட்ட பதிவகத்தில்/பிரதேச செயலகத்தில் சமர்ப்பித்து உதவி பதிவாளர் நாயகம் அலுவலகத்திலிருந்து உத்தேச வயது சான்றிதழை பெறலாம்.

அண்மையில் மாற்றம் செய்யப்பட்ட பிறப்பு சான்றிதழ் தொடர்பான விபரங்கள் அடுத்த பதிவில் ஆராயப்படும்.

சட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட பதிவுகளை படிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள்

எங்களுடைய பதிவுகளை SMS இல் பெறுவதற்கு கீழே உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவுசெய்யுங்கள்

    எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்

    எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வாட்ஸ்ஆப் குழுவுடன் இணையுங்கள்

    PREV POST திருமண பதிவு செய்யப்படாமல் இடம்பெறும் வழக்காற்று திருமணம் செல்லுபடியாகுமா?
    NEXT POST பிறப்பு, விவாக மற்றும் இறப்புச் சான்றிதழ்களின் பிரதிகளை Online மூலமாக விண்ணப்பித்து பெறுவது எப்படி?