பிறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி என்பது இன்று பலருக்கு குழப்பங்கள் உள்ளது . இலங்கையின் ஒவ்வொரு பிரஜைக்கும் பிறப்பு பதிவு செய்வது அவர்களின் உறவினர்களின் முக்கிய கடமையாகும் . பொதுவாக ஒரு குழந்தை பிறந்து 3 மாதத்தினுள் அப்பிரிவுக்குரிய கிராமிய பதிவாளரிடம்/ வைத்தியசாலை பதிவாளரிடம் பதிவு செய்யவேண்டும். பிறப்புப்பதிவு தொடர்பான விபரங்கள் தொடர்ந்துவரும் பதிவுகளில் விரிவாக ஆராயப்படும். அதற்குமுன்னர் ஏற்கனவே பதியப்பட்ட பிறப்பு சான்றிதழ் ஒன்றின் மூலப்பிரதியை எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம் என பார்ப்போம்.
அரச அலுவலகங்களில் பிறப்பு சான்றிதழ் பெறுவது மிகவும் சிக்கலான விடயமாக இருப்பதாகவே எல்லோரும் நினைக்கின்றார்கள். ஆனால் இது தொடர்பான அடிப்படைகள் புரியும்போது இலகுவான விடயமாக இருக்கும் .
இலங்கையில் பதியப்பட்ட பிறப்பு சான்றிதழ்கள் அப்பிரிவுக்குரிய பிரதேச செயலாளர் அலுவலகங்களில் உள்ள பதிவாளர்கிளையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். உதாரணமாக யாழ்ப்பாண போதனாவைத்தியசாலையில் பிறந்த பிள்ளையின் பதிவு யாழ்ப்பாண பிரதேசசெயலகத்திலும், தெல்லிப்பளை வைத்தியசாலையில் பிறந்த பிள்ளையின் பதிவு தெல்லிப்பளை பிரதேசசெயலகத்திலும் காணப்படும். இலங்கையின் சட்டப்படி ஒரு பிள்ளை எந்த பிரதேசத்தில் பிறந்ததோ அந்த பகுதிக்குரிய பிரதேசசெயலகத்துக்குரிய பதிவாளரிடம் மட்டுமே பதிய முடியும். அதாவது கிளிநொச்சி வைத்தியசாலையில் மகப்பேறுக்காக அனுமதிக்கப்பட தாயொருவர் மேலதிக கவனிப்புக்காக யாழ்போதனாவைத்தியசாலைக்கு மாற்றப்படும்போது குழந்தை பிறக்குமிடத்து யாழ்ப்பாண பிரதேசசெயலகத்திலேயே பதிவுசெய்யமுடியும்.
எனவே தொழில் தேவைகளுக்கோ அல்லது கற்றல் தேவைகளுக்காக உங்களுடைய பிறப்புசான்றிதழ் மூலப்பிரதியை பெற்றுத்தருமாறு கோரப்பட்டால் அது பதிவுசெய்யப்பட்ட பிரதேச செயலகத்துக்கு செல்லவேண்டும்.
தற்போது இலங்கையின் சகலமாவட்டத்திலும் பதிவு செய்யப்பட்ட பிறப்புசான்றிதழ்கள் அவரவர் வசிக்கும் பிரதேச செயலகத்திலேயே பெறமுடியும். இதன்படி குறித்த ஒரு பிறப்பு சான்றிதழ் ஒன்லைன்இல் நிச்சயமாக பெறமுடியும் என்று கூறமுடியாது. வேறு மாவட்டத்துக்குரிய பிறப்பு சான்றிதழ் எமது பிரதேசசெயலகத்தில் கிடைக்காதபோது ஒன்லைன் சான்றிதழ் ஏன் பெறமுடியாது என குழப்பம் இருந்திருக்கும்.
உண்மையாக ஒன்லைன் சான்றிதழ் பெறுவதில் சில மட்டுப்பாடுகள் உண்டு . ஒன்லைன் சான்றிதழ் என்பது ஏற்கனவே புத்தகங்களில் உள்ள பதிவுகள் ஸ்கேன் செய்யப்பட்டு தரவுகளாக சேர்க்கப்படட்டவை ஆகும்.
இலங்கையில் தற்போது 1960- 2012 வரையான காலப்பகுதிக்குரிய பிறப்பு சான்றிதழ்களே ஸ்கேன் செய்யப்பட்டுள்ளன. எனினும் சில மாவட்ட்ங்களில் 1960ம் ஆண்டிற்கு முற்பட்ட மற்றும் 2012ம் ஆண்டிற்கு பிற்பட்ட பதிவுகளும் ஸ்கேன் செய்யப்பட்டிருக்கின்றன. எனவே வேறு மாவட்டங்களில் பதிவு செய்தவர்கள் பதிவாளர் கிளையில் பிறப்பு சான்றிதழ் இலக்கத்தை கொடுத்து சான்றிதழ் இருக்கின்றதா என அறிய முடியும் .
படிவத்தின் மாதிரி இணைக்கப்பட்டுள்ளது. இதனை இங்கு டவுன்லோட் செய்து நீங்களும் பூரணப்படுத்தி பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்கமுடியும். மஞ்சள் கோடுகளால் அடையாளப்படுத்தப்படட பகுதிகள் கட்டாயமாக நிரப்பப்படல் வேண்டும். பதிவாளர் பிரிவு, பதிவு இலக்கம் என்பன பிறப்புசான்றிதழின் வலதுபக்க மேல் மூலையில் காணப்படும். பொதுவாக பிறப்புசான்றிதழ் பெறச்செல்லும்போது உங்களிடமுள்ள சான்றிதழின் போட்டோபிரதியோ / மூலப்பிரதியையோ எடுத்துசென்றால் படிவத்தை நிரப்புவது இலகுவானது.
பிறப்பு சான்றிதழின் பதிவு இலக்கம் தெரியுமிடத்து ஒரு பிரதிக்கான கட்டணம் ரூபா. 100 அறவிடப்படும். உதாரணமாக 5 பிரதிகள் பெறவேண்டி இருப்பின் ரூபா. 100 படி ரூபா 500 செலுத்தவேண்டும் . இலக்கம் தெரியாத பிறப்பு சான்றிதழ் எனின் ஒரு பிரதிக்காக ரூபா. 200 அறவிடப்படும். உதாரணமாக இலக்கம் தெரியாத சான்றிதழில் 3 பிரதி பெறுமிடத்து ரூபா 400 அறவிடப்படும் (இலக்கம் தெரியாத பிரதிக் குரிய கட்டணம் ரூபா. 200+ ஏனைய 2 பிரதிக்குரிய கட்டணமாக ரூபா 100 படி ரூபா 200)
எமது Youtube சேனலை Subscribe செய்ய கீழே உள்ள Button ஐ அழுத்துங்கள்.
பிறப்பு சான்றிதழின் பதிவு இலக்கம் தெரியுமிடத்து அன்றய நாளிலே அதிக பட்சமாக பெற்றுக்கொள்ள முடியும். மக்கள் எண்ணிக்கை குறைந்த பிரதேச செயலாளர் அலுவலகங்களில் 30 நிமிடத்தில் கூட பெறலாம்.
இலக்கம் தெரியாத பிறப்பு சான்றிதழ்கள் ஒன்லைன் தரவேற்றத்தில் காணப்படாதபோது சில நாட்கள் எடுக்கலாம். தவறான இலக்கம்/தகவல்களை வழங்குதல் போன்ற காரணங்களாலும் தாமதமாகலாம்.
பிறப்பு சான்றிதழ் படிவத்தை நிரப்பி படிவத்தில் காணப்படும் வங்கி இலக்கத்துக்கு பணம் செலுத்தி அதன் பற்றுசீட்டுடன் சுய விலாசமிடப்பட்ட கடித உறையுடன் உரிய பிரதேச செயலகத்துக்கு அனுப்ப வேண்டும். தபாலில் பிறப்பு சான்றிதழ் மீள கிடைக்கும் நாட்கள் பிரதேச செயலகத்துக்கு செயலகம் மாறுபடும் .
அனுப்பும் முகவரியின் மாதிரி:
மேலதிக மாவட்ட பதிவாளர்,
பிரதேச செயலகம்,
கோப்பாய்,
யாழ்ப்பாண மாவட்டம்.
பிறப்பு சான்றிதழ் ஒன்றின் மூலப்பிரதிக்கான செல்லுபடியாகும் காலம் எதுவும்இல்லை. ஆனால் கடவுச்சீட்டு, தேசிய அடையாள அட்டை போன்றவைக்கு விண்ணப்பிக்கும் போது 6 மாதத்திற்கு / 3 மாதத்திற்கு உட்பட்ட பிறப்பு சான்றிதழ்கள் கோரப்பட்டால் அந்த நிபந்தனை பூர்த்தி செய்யப்படவேண்டும்.
பிறப்புசான்றிதழின் காலப்பகுதி தொடர்பாக எவ்வித நிபந்தனையும் விதிக்கப்படாதபோது 2-3 வருடத்திற்குமுன் பெறப்பட்ட சான்றிதழ்களும் சமர்பிக்கப்படலாம். தற்போது பிறப்பு சான்றிதழ் 6 மாதத்திற்கே செல்லுபடியாகும் என்ற பிழையான கருத்து நிலவுகின்றது.
ஏனைய சான்றிதழ் பெறுதல் தொடர்பான பதிவுகளை படிக்க மேற்படி இணைப்புகளை கிளிக் செய்யுங்கள்
1. இறப்பு சான்றிதழ் மூலப்பிரதி பெறுவது எப்படி?
2. திருமண சான்றிதழ் மூலப்பிரதி பெறுவது எப்படி ?
சட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட எமது பதிவுகளை படிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள்
குடியியல்பதிவு தொடர்பாக முழுமையான விபரங்களை பெற இலங்கை பதிவாளர் நாயகம் திணைக்கள இணையதளத்தை நாட முடியும். பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் சகல பிரதேசசெயலகங்களின் பதிவாளர்கிளையில் பணிக்கமர்த்தப்பட்டிருப்பர்.
இந்தபதிவு பலர் பயனடையும் பொருட்டு கீழேஉள்ள பேஸ்புக் , வைபர் ,வாட்ஸ்அப் போன்ற சமுக வலைத்தள இணைப்புகளூடாக பகிர்ந்துகொள்ளுங்கள்.
மேலும் உங்களுக்கு பிறப்பு சான்றிதழ் பெறுதல் தொடர்பாக சந்தேகங்கள் இருப்பின் கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் இல் கேள்விகள் கேட்கமுடியும்
எங்களுடைய பதிவுகளை மின்னஞ்சலில் பெறுவதற்கு கீழே உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவுசெய்யுங்கள்